About the Department
என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பொதுத்தமிழ் பாடம் தமிழ்த்துறைப் பேராசிரியர்களால் 2005 ஆம் ஆண்டு முதல் சிறந்த முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு, தமிழரின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் நெறிமுறைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு பேராசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு தமிழ்மொழியினை சிறந்த முறையில் கற்பித்து அவர்களை ஆக்கம்பெறச் செய்து அகம் மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்துறையில் அனுபவமும், தகுதியும் வாய்ந்த பேராசிரியப் பெருமக்கள் தோழமையோடு மாணவர்களுக்கு கல்விப்பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் ஆளுமைத் திறனை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் மன்றம் சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் வாயிலாக மாணவர்களுக்கு பல்வேறு விதமான தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்தி மாணவர்களின் ஆளுமைகளை வளர்த்தெடுத்து வருகின்றனர்.